செவ்வாய்க்கிழமை, 6 ஜனவரி 2026
மேஷம்
aries-mesham
இன்று ஓஹோ என இருக்காது. இன்றைய நாள் கழிவது யுகங்கழிவது போன்றிருக்கும். தாயின் உடல் நிலையில் அதிக அக்கறை கொள்ளுங்கள். நிம்மதியான தூக்கம் வராது.
ரிஷபம்
taurus-rishibum
புதிய கலைப் பயிற்சிகள் மற்றும் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். சாதுர்யமான வாக்கு வன்மையால் சம்பாத்தியம் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான பணவரவால் சந்தோஷம் நிலவும்.
மிதுனம்
gemini-mithunum
இன்று சுமாரான நாள். சிலருக்கு மனைவியால் மன நிம்மதி குறையும். எடுத்த காரியங்கள் ஏற்றம் தராது என்பதால், ஒத்திப் போடுவது நல்லது. கடின உழைப்பே கல்வியில் தேர்ச்சி அளிக்கும்.
கன்னி
virgo-kanni
அரசு ஆதரவும், கல்வியில் தேர்ச்சியும் ஏற்படும். தன்னம்பிக்கை, மற்றும் தைரியம் அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் மேலோங்கும். காரிய வெற்றி களிப்பு உண்டாகும்.
மகரம்
capricorn-magaram
புதிய கல்லூரி வாழ்க்கை, புதிய பயிற்சி எனக் கல்வியில் சிறப்பான தேர்ச்சி ஏற்படும். புதிய காதல் உருவாகி களிப்புத் தரும். வியாபாரத்தில் திருப்திகரமான பணவரவால் சந்தோஷம் நிலவும்.
கடகம்
cancer-kadagam
உயர்போகம், நல் ஆரோக்கியம், சந்ததி விருத்தி, மந்திர சித்தி, பதவி உயர்வு என இராஜயோகம் தரும் நாள். வாக்கு வன்மையால் வருமானம் பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சிம்மம்
leo-simmam
சோகமான நாளாக இல்லையெனினும், சுகமான நாளாக இருக்காது. பெண்களின் பிடிவாதத்தால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்துடன் அனுசரித்துச் செல்வது குழப்பங்களைத் தவிர்க்கும்.
துலாம்
libra-thulam
காரிய வெற்றி தரும் களிப்பான நாள். அரசு ஆதரவு இருக்கும் அனுகூலமான நாள். அதிகாரம் மிக்க பதவி உயர்வு ஏற்படும். தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் தேகதிடம் அதிகரிக்கும்.
மீனம்
pisces-meenam
சுமாரான நாள். மனைவி, மக்களின் உடல் நிலையைப் பொறுத்தவரை அக்கறை படவேண்டிய நாள். மேலதிகாரிகள் மற்றும் பெரியவர்களிடம் வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது.
தனுசு
sagittarius-thanusu
சினத்தைக் குறைத்து சிரித்து மகிழுங்கள். மாற்றம் ஒன்றே மாறாதது. எனவே, இன்று மாற்றங்களை எதிர்பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
தெய்வ சிந்தனை அதிகரிக்கும். கோவில், குளம் போன்ற திருப்பணிகளில் ஈடுபடுவதால், புகழ் ஓங்கும். உல்லாசப் பயணங்கள் மூலம் சந்தோஷம் நிலவும். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும்.
கும்பம்
aquarius-kumbam
பல வழிகளிலும் பணவரவு ஏற்பட போகும் இனிய நாள். எல்லா வகையிலும் ஏற்றந்தரும் நாள். நல் ஆரோக்கியம், நண்பர்கள் சந்திப்பு, திருமணம் மற்றும் நல்முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்.
