மோட்டார் சைக்கிள், டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தெஹிவத்தை பகுதியில் நேற்று புதன்கிழமை (31) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளதுடன், அந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் வாகனத்துடன் மோதுண்டுள்ளது.
இதன்போது சேருநுவர - தெஹிவத்தை பகுதியைச் சேர்ந்த எம்.ஏ.சாமிக்க அசான் என்ற 20 வயது இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
அதே மோட்டார் சைக்கிளில் பயணித்த 16, 19 வயதுகளையுடைய இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இளைஞர்கள் மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்,
உயிரிழந்த இளைஞனின் சடலம் கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


