மனைவியை கொல்ல 15 நாட்கள் துப்பாக்கி பயிற்சி எடுத்த பொறியியலாளர் ; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

 


மனைவியை கொல்ல கணவர் 15 நாட்கள் துப்பாக்கி பயிற்சி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் பெங்களூரு சோலூர்பாளையா பகுதியில் பொறியிலாளர் ஒருவர் மற்றும் உதவி மேலாளராக பணிபுரியும் இவரது மனைவி வசித்துள்ளனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.குறித்த மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி வந்ததால் கடந்த ஓராண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர். மேலும் கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டும் அவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த நிலையில் கணவன் துப்பாக்கியால் மனைவியை சுட்டுக்கொன்றுள்ளார். இதுகுறித்து மாகடி ரோடு பொலிஸார் வழக்குப்பதிவு செய்து பொறியிலாளரை கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் தற்போது பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளது. கணவரை விட்டு பிரிந்து சென்ற மனைவி விவாகரத்து கேட்டுவழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்றவர் மனைவியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார்.துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல அவர் முடிவு செய்துள்ளார்.

இதற்காக துப்பாக்கிகளை வாங்க அவர் 3 முறை பீகார் சென்றதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் 15 நாட்கள் அவர் பீகாரிலேயே தங்கியிருந்து துப்பாக்கியை எப்படி கையாளுவது என பயிற்சியும் எடுத்துள்ளார். அதன்பிறகே அவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதும் தெரியவந்துள்ளது.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.