பொய்யான மற்றும் ஒழுக்கமற்ற செய்திகள் பரப்புபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.
நாட்டெங்கும் பேரழிவு நிலைமை நீடிக்கும் இவ்வேளையில், சிலர் சமூக வலைதளங்களில் சரிபார்க்காத தகவல்களை பகிர்ந்து பொதுமக்கள் மத்தியில் பயமும் குழப்பமும் ஏற்படுத்துவதாக CID–க்கு பல புகார்கள் கிடைத்துள்ளன.
கணினி குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அரசாங்கம் மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள நிலையில், தவறான தகவல்கள் வெளியிடுவது குற்றமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
பேரிடர் மையங்களில் பாலியல் வன்முறை, அனுமதியற்ற நுழைவு, திருட்டு, கொள்ளை போன்ற குற்றச்செயல்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தெரிவித்துள்ளது.
சிக்கல் ஏற்பட்டால் தொடர்பு கொள்ள:
📞 Tourist Police: 0718591894 / 0112421070 / 1912
📞 Airport OIC: 0718596057 / 0718591640
☎️ 24 Hours
பேரிடர் தொடர்பான புகார்களுக்கு:
📞 0718595884 / 0718595883 / 0718595882 / 0718595881 / 0718595880
