இஸ்ரேல் நாட்டில் இலங்கை தொழிலாளர்களை தற்காலிகமாக பணிக்கு அமர்த்துவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
அதன்படி வீட்டு பராமரிப்பு, விவசாயம், கட்டுமானம் போன்ற துறைகளில் வேலைகளுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான செயல்படுத்தல் திட்டங்கள் அவ்வப்போது கையெழுத்திடப்பட்டன.
இந்த ஒப்பந்தங்களின் கீழ் இஸ்ரேலில் வணிக மற்றும் சேவைத் துறைகளில் இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த இஸ்ரேல் அதிகார பூர்வமாக விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.அதன்படி, அந்தத் துறையில் இலங்கை தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
