பளை இத்தாவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் ரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்டவரே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளார் , நாட்டில் சீரற்ற நிலை காரணமாக கடந்த 26 தினங்களாக சேவையில் ஈடுபடாமலிருந்த யாழ் தேவி இன்று 23ஆம் திகதி மீண்டும் சேவையை தொடர்வதற்காக அனுராதபுரத்திலிருந்து காலை காங்கேசன் துறை நோக்கிச் சென்ற போதே இவ் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
