பிரித்தானியாவில் மோசமான செயல்; அரச சேவையில் இருந்து தூக்கி எறியப்பட்ட தமிழர்!

 

பிரித்தானியாவில் சிறுமி ஒருவரிடம் தகாத முறையில் செயற்பட்ட தமிழர் ஒருவர் அரச சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அத்துடன் சந்தேக நபரான் தமிழருக்கு 24 மாத சிறைத்தண்டனையும் நார்விச் கிரவுன் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.

12 வயதான சிறுமி ஒருவரிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடி்பபடையில் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Ipswich பகுதியிலுள்ள தேசிய சுகாதார சேவையில் ரேடியோகிராஃபராக (radiographer) பணியாற்றிய 42 வயதான வினோத் ராமச்சந்திரன் என்பவரே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சமூக வலைத்தளம் ஊடாக குறித்த சிறுமியுடன் தகாத முறையில் உரையாடல்களை மேற்கொண்டமை தொடர்பில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

அதோடு இருவரும் சந்திக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்று தனது விருப்பதையும் சிறுமியிடம் மிக மோசமாக விபரித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதோடு பொலிசாரிடம் சொல்ல வேண்டாம் என்றும் சிறுமியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாது ராமச்சந்திரன் நிகழ்நிலையில் தகாத படங்களை எப்படி பார்ப்பது என்பது தொடர்பிலும் கற்றுக் கொடுத்ததோடு பாலியல் ரீதியிலான படங்களையும் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் பல்வேறு துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகநபரான தமிழர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.