புயலால் பாதிக்கப்பட்டோருக்கான நிதி நிவாரணத்தை 25 இலட்சம் வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி
டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் நிதி நிவாரணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நடுத்தர மற்றும் பாரிய அளவிலான வர்த்தக உரிமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தகுதியுள்ள வர்த்தக உரிமையாளர்கள் ரூ. 2.5 மில்லியன் (25 இலட்சம்) வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
இந்த கடனுக்கான வருடாந்த வட்டி வீதம் வெறும் 3% மட்டுமே.
அத்துடன் கடன் பெற்ற பிறகு முதல் 6 மாதங்களுக்குத் தவணை செலுத்த வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 6 மாத சலுகைக்காலத்தைத் தொடர்ந்து, எஞ்சிய 3 ஆண்டுகளுக்குள் கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடன் வழங்கப்பட்டதிலிருந்து 06 மாதங்களுக்கு சலுகைக்காலம் வழங்கப்படும்.
சலுகைக்காலம் உட்பட மொத்தம் 03 ஆண்டுகளுக்குள் இக்கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி பெற்ற வணிக வங்கிகள் மற்றும் விசேட வங்கிகள் ஊடாக இந்த கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன் குறிப்பாக இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியன இதில் முன்னின்று செயற்படுகின்றன.
இத்திட்டத்திற்காக 05 பில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கீடு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)