பலாங்கொடை, வேவல்வத்த வெள்ளவள பகுதியில் இரண்டரை வயதுடைய ஆண் குழந்தை ஒன்று ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேவல்வத்த வெள்ளவள பகுதியைச் சேர்ந்த குறித்த குழந்தை, தனது வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்குள்ள சிறிய ஆற்றில் தவறி விழுந்துள்ளது.
ஆற்றில் விழுந்த குழந்தையை உறவினர்கள் உடனடியாக மீட்டு, பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் அனுமதித்தனர்.
எனினும், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குழந்தையின் உடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வேவல்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
.jpg)