திருமணம் நிறைவேறாத மன விரக்தியில் யாழ். கோண்டாவிலில் இளைஞரொருவர் (31.10.2025) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
கோண்டாவில் குமரபுரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் ஜெயராஜ் (வயது-31) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். குறித்த சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
