வவுனியாவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்-தம்பதியினர் உயிரற்ற உடலங்களாக மீட்பு

 

வவுனியா சாந்தசோலை ஏ9 வீதியில் கார் நீரில் அடித்துச் சென்ற நிலையில் காரிலிருந்து இரு சடலங்கள் மீட்பு

வவுனியா, சாந்தசோலை ஏ9 வீதியில் நீரில் அடித்துச் சென்ற நிலையில் கார் ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், அதன் உள்ளே இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக தெரியவருகையில், 

குறித்த சம்பவமானது ஏ9 வீதி சாந்தசோலை சந்திக்கு அருகாமாயில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது 

ஏ9 வீதி சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டுள்ளதை அவதானித்த கிராம மக்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலினை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இராணுவம் மற்றும் பொலிஸார் கிராம இளைஞர்களுடன் இணைந்து குறித்த காரினை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட காரினை மீடடுள்ளதுடன், காரில் பயணித்த ஆண் மற்றும் பெண் ஒருவர் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.

உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளை குறித்த வீதியானது சீரற்ற காலநிலையால் வெள்ளநீர் வீதியை மூடி செல்வதன் காரணமாக நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.