அரகலய போராட்டம் ஒடுக்கப்பட்டது என்று பிபிசி, அல்-ஜசீரா என எல்லா இடங்களிலும் கூறினார்கள். எவ்வளவு ஒடுக்கினார்கள் என்றால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நான் தோற்றேன்.
பங்களாதேஷிலும் ஒரு பிரச்சினை ஏற்பட்டது. அங்கு வீதிக்கு இறங்கியவர்கள் மீது கடைசியில் அரசாங்கம் சுட வேண்டியதாயிற்று. எங்களுக்கு ஏற்பட்ட அளவு கடுமையான பிரச்சினை அவர்களுக்கு இல்லை. நேபாளத்தில் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது பற்றிப் பாருங்கள். அங்குதான் பிரச்சினை தொடங்கியது. எங்களுக்கு இருந்தவை இவற்றைவிடக் கடுமையான பிரச்சினைகள். எவ்வாறாயினும், ஜனநாயகத்தின் ஊடாக அதைப் பாதுகாக்க நாங்கள் செயற்பட்டோம். எங்களால் அதைக் செய்ய முடிந்தது.
உலகிலேயே இப்படிப்பட்ட வெற்றிகரமான ஒடுக்குமுறை எங்கேயும் நடந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், ஆசியாவிலேயே பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றுதான் இலங்கை. நாம் இதைப் போற்ற வேண்டும். இதைப் பாதுகாக்க வேண்டும். இதை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.
இது எந்தவொரு அரசாங்கத்தினதும் கடமையாகும். அதைச் செய்ய முடியாவிட்டால், எங்களால் ஆட்சி செய்ய முடியும் என்று எந்தவொரு அரசாங்கமும் சொல்ல முடியாது." கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
