யாழில் ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற இளம் தாய் தீடிரென உயிரிழப்பு வடமராட்சி வதிரியில் துயரம் !
வதிரி பகுதியில் திருமணம் செய்து 20 வருடங்களுக்கு பின் ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற இளம் தாய் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது ,
யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 07 திகதி ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற நிலையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் நேற்றைய தினம் மாலை 02:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழநதுள்ளார் மூன்று குழந்தைகளும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது
இச் சம்பவத்தில் வதிரி பகுதியைச் சேர்ந்த யோகராஜா மயூரதி வயது 46 என்ற தாயை இவ்வாறு உயிரிழந்துள்ளார்
திருமணம் செய்து 20 ஆண்டுகளாக குழந்தை இன்றி பெரும் கஷ்டங்களையும் துன்பங்களையும் எதிர் கொண்டு விட்டு மூன்று பிள்ளைகளையும் பார்க்காமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
