களு கங்கை ஆற்றுப் படுகையின் தாழ்வான பகுதிகளில் நிலவும் வெள்ள நிலைமை, குறிப்பிடத்தக்க அளவு வெள்ள நிலைமையாக அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக, களு கங்கை பெருக்கெடுக்கும் தாழ்வான பகுதிகளுக்குரிய பின்வரும் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:களுத்துறை (Kalutara)
இங்கிரிய (Ingiriya)
ஹொரணை (Horana)
தொடங்கொட (Dodangoda)
மில்லனிய (Millaniya)
புளத்சிங்கள (Bulathsinhala)
பாலிந்தநுவர (Palindanuwara)
மதுராவல (Madurawala)
அகலவத்தை (Agalawatta)
இப்பிரதேசங்கள் ஊடாகப் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் இது தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
