பொலிஸ் உத்தியோகத்தர் பலி-வெளியான அதிர்ச்சி காரணம

 

அநுராதபுரத்தில் ஹத்தரேஎல - பரசன்கஸ்வெவ வீதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் பொலிஸ் சார்ஜன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அனர்த்தம்  புதன்கிழமை (26) இரவு 7.50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அநுராதபுரம் உடமளுவ பொலிஸ் நிலையத்தில் கடமை செய்து வந்த 56 வயதுடைய பொலிஸ் சார்ஜன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பொலிஸ் சார்ஜன் கடமை முடிந்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த போது அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பரசன்கஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.