இலங்கையில் சற்று முன் நேர்ந்த மற்றுமொரு விபரீதம் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி{படங்கள்}

 சாய்ந்தமருதில் கால்வாயில் கார் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த  மூவர் உயிரிழப்பு

வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று தடம்பிரண்டு மூழ்கியதில் அந்த காரில் பயணம் செய்த மூவர் மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்துள்ளனர்

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் உள்ள  கரைவாகுப்பற்று பொலிவேரியன் குடியேற்றப்பகுதியில் இன்று(27) முற்பகல் இடம்பெற்றது.

இதன் போது அனர்த்த முகாமைத்துவத்தில் ஈடுபடும் குழுவினர் சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த செயலணி பொலிஸார் இணைந்து மேற்கொண்ட மீட்புப்பணியின் போது கால்வாயில் வீழ்ந்த கார் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் காரில்  காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  கணவன் மனைவி  மற்றும்  பேத்தி  என மூவர் பயணித்துள்ள நிலையில் மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர்  தெரிவித்தார்.

மேற்ப்படி அனர்த்தத்தில்

Sinnalebbe Saburdeen

Age 62

கணவன்

Mohamed Thambi Thasmy

Age 59

மனைவி

Mohamed Jareen Asala Mehvis

Age 6

பேத்தி ஆகியோரே உயிரிழந்துள்ளனர்

 மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.