வியாழக்கிழமை, 6 நவம்பர் 2025
மேஷம்
aries-mesham
தொழில், வியாபாரத்தில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். இனிய பேச்சால் எல்லோரையும் கவர்ந்திடுவீர்கள். பல வழிகளிலும் வருமானங்கள் சீராக உயரும். அரசியல் ஆதாயங்கள் ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
மனநிம்மதி எங்கே எனத் தேடவேண்டிய நாளாக இருக்கும். பெண்களால் தேவையற்ற பணச் செலவுகள் ஏற்படும். பொறுமை இன்மையால் அனைவரின் மீதும் ஒரு தேவையற்ற வெறுப்பு ஏற்படும்
மிதுனம்
gemini-mithunum
எல்லா விதத்திலும் ஏற்றம் தரும் நாள். தங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தி பணிபுரியும் இடத்தில் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும்.
கன்னி
virgo-kanni
கோபத்தைக் குறைத்து, நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். மனைவியின் கலகத்தால், வீட்டில் குழப்பங்கள் உண்டாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் முன்னேற்றம் உண்டு.
மகரம்
capricorn-magaram
அனைவரையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க நேரும். தாயின் ஆரோக்கியத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டிய நாள். பயமின்றி முழு முயற்சி செய்து முன்னேறுங்கள்.
கடகம்
cancer-kadagam
உங்கள் தீவிர முயற்சியால் தனவரவு அதிகரிக்கும். அரசு உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபங்கள் ஏற்படும். நேர்மையுடன் தொழில் செய்தால் அதிக இலாபம் காணலாம்.
சிம்மம்
leo-simmam
தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். இறையருளால், வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
libra-thulam
எதிர்பார்ப்புக்கும் மேலான அதிக தனவரவு இருக்கும். மனதில் மகிழ்ச்சியும் தெம்பும் அதிகரிக்கும். இனிய பேச்சால் எதிரியையும் வசமாக்குவர். வாகனயோகமும், சிறுதூரப் பயணங்களும் மகிழ்ச்சி தரும்.
மீனம்
pisces-meenam
எதிர்பார்த்த பணவரவுகள் தாமதப்படும். உறவுகளோடு வீண் வாதங்களைத் தவிர்த்தால் இல்லத்தில் அமைதி நிலவும். காரியங்கள் கைகூட கடின உழைப்புத் தேவை.
தனுசு
sagittarius-thanusu
மனச் சோர்வும், உடற்சோர்வு ஏற்படும். பயணங்களில் தடைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். என்னதான் கடினமாக உழைத்தாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது.
விருச்சிகம்
scorpio-viruchagam
விரும்பிய பொருட்கள் வீடுவந்து சேரும்.எல்லா வளமும் பெருகும். இனிய சுற்றுலாப் பயணங்களால் இன்பம் பெருகும். பெண்ணின் சிநேகமும், தனக்கெனத் தனிவீடும் அமையும்.
கும்பம்
aquarius-kumbam
எதிலும் வெற்றிக் கனியைப் பறிப்பீர்கள். வாக்குவன்மையால் வருமானம் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு, கல்வியில் தேர்ச்சி போன்ற நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.
