ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் ரொஸெல்ல பகுதியில், ஓட்டுனர் ஒரு மோட்டார் வண்டியை பாதுகாப்பற்ற முறையில் வேகமாக செலுத்தியதனால், அவர் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் வந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானார்.
இந்த விபத்தில் மோட்டார் வண்டியில் பயணித்த இருவரும் காயமடைந்து, வட்டவளை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
