குடகு மாவட்டத்தின் குஷல்நகர் தாலுகாவில், பசுமையான புல்வெளிகளுக்கு இடையே அமைந்த பாசவன ஹள்ளி கிராமம். அங்கு, 35 வயது கொண்ட குருபரா சுரேஷ் என்பவர், தினசரி வேலையாட்சியாக வாழ்ந்து வந்தார். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இவர், 18 ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகே என்ற இளம்பெண்ணைத் திருமணம் செய்துக்கொண்டார்.
இருவருக்கும் இரண்டு குழந்தைகள் – இரண்டு வயது வித்தியாசம் கொண்ட இரு குறும்புச் சிறுவர்கள். வாழ்க்கை, போன்று அமைதியாக ஓடியது. ஆனால், 2020 அக்டோபர் 10-ம் தேதி இரவு, எல்லாவற்றையும் தாண்டிய புயல் வந்தது.
மல்லிகே, வீட்டை விட்டு மறைந்தார். சுரேஷ், முதலில் அவரது உறவினர் கணேஷுடன் ஏற்பட்ட கள்ள தொடர்பு காரணம் என நினைத்தார். "அவள் உயிருடன் இருக்கிறாள்," என்று அவர் உறுதியாக நம்பினார். ஆனால், கிராமத்தினர் மல்லிகே கொலை செய்தது விட்டானோ என சுரேஷை சந்தேகத்தின் கண்ணாடியில் பார்த்தனர்.
நவம்பர் 13-ம் தேதி, குஷல்நகர் கிராம நகர சமாதான நிலையத்தில் மல்லிகே மறைவு புகாரைப் பதிவு செய்தார் சுரேஷ். "அவளைத் தேடுங்கள்," என்று வேண்டினார். போலீஸ்? அவர்கள் அமைதியாக இருந்தனர். "நாங்க தேடுறோம்.. பெட்ரோல் செலவுக்கு காசு குடுக்குறியா..?" என்று சொல்லி, பெட்ரோல் செலவுக்கு கூட பணம் கேட்டனர்.
அடுத்த நாள், பக்கத்துக்கு மாவட்டமான மைசூரின் பெட்டடாப்பூரா போலீஸ், ஒரு திறந்த புல்வெளியில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடலை கண்டுபிடித்தது. அடையாளம் தெரியாதது.
இந்த அடையாளம் தெரியாத உடல் சுரேஷின் வாழ்க்கை ஒரு இருள் சூழ்ந்த கதையாக மாற்றியது. 2021 மே மாதம், போலீஸ் சுரேஷை கைது செய்தது. "நீ மல்லிகேவை கொலை பண்ணிட்ட" என்று குற்றம்சாட்டினர்.
அடிப்படை? சுரேஷும் மல்லிகேவும் அடிக்கடி சண்டை போடுவார்கள். நிறைய முறை என் மகள் மல்லிகேவை திட்டுவான் சுரேஷ், மோசமான திருமண வாழ்க்கை வாழ்ந்ததாக, மல்லிகேவின் தாய் கௌரி கூறினார்.
அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் உடல் அருகே இருந்த சேலை, செருப்பு, வளையல்கள் எல்லாமே என் மகள் மல்லிகேவுடையது என்று அவள் அடையாளம் காட்டினாள்.
சுரேஷின் மகன் கூட, போலீஸ் நிலையத்துக்கு வந்து உறுதிப்படுத்தினான். "அப்பாதான் கொலை பண்ணிட்டார்.." என்று கூறினான். சுரேஷ், போலீஸ் முன்னால் நிற்கும் போது, தன் மனைவியின் கள்ள தொடர்பை ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.
ஆனால், "அவள் உயிருடன் இருக்கிறாள், நான் கொலை பண்ணல.. நம்புங்க.." என்று அவர் சொன்னதை யாரும் கேட்கவில்லை. அப்போ, உன் குழந்தையும் பொய் சொல்லுதா.. விளையாட்டு பண்றியா.. காக்கிகள் சத்தம் போட்டனர்.
சுரேஷ் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். சிறை. 17 மாதங்கள். இருள் சிறைக் கோபுரங்களுக்குள், சுரேஷின் உடல் சோர்ந்தாலும், மனம் உயிருடன் இருந்தது. "என் குழந்தைகலிடமே என்னை கொலைகாரன் என்று நம்ப வைத்துவிட்டார்கள்," என்று அவர் அழுதார்.
கிராமம் முழுவதும், உறவினர்கள், அயலார்கள் – அனைவரும் அவனை தவிர்த்தனர். சமூக அவமானம், ஒரு கூர்மையான கத்தியாக அவரது இதயத்தை குத்தியது. 2023 செப்டம்பர், ஜாமீனில் விடுதலை. ஆனால், சுதந்திரம் என்பது பெயரளவு மட்டுமே. கிராமத்தில், "மல்லிகேவை கொன்றவன்" என்று இன்னும் அழைத்தனர்.
அவரது இரு குழந்தைகளும், தந்தையை சந்தேகத்தோடு பார்த்தன. "நான் குற்றவாளி இல்லை.. நான் கொலை பண்ணல.. என்னை நம்புங்க.." என்று குழந்தைகளிடம் வேண்டி அழுதார் சுரேஷ். ஆனால், யாரும் கேட்கவில்லை.
ஆனால், போலீஸ் சுரேஷ் சொல்வது உண்மையாக இருக்குமோ.. ஒரு வேளை வேறு யாராவது கொலை செய்திருப்பார்களோ.. என்று யூகித்தனர்.. மல்லிகே கள்ளத்தொடர்பில் இருந்த கணேஷ் கொலை செய்திருப்பானோ..? என்று சந்தேகித்தனர்.
சுரேஷின் குடும்பம், போலீஸ் மீது நம்பிக்கை இழந்தது. "நாங்களே தேடுவோம்," மல்லிகேவின் படங்களை ஊர் முழுக்க வாட்சப், பார்பவர்கள், தெரிந்தவர்கள் என அனைவருக்கும் அனுப்பினர்.
"எங்கு இருந்தாலும், தெரிவிக்கவும் என கதறும் ஆடியோ.." 2024 ஏப்ரல் 1. மதிகேரி நகரம். சுரேஷின் இரு நண்பர்கள், தங்கள் வாகனத்துக்கு காப்பீடு செய்ய வந்திருந்தனர். அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட சென்றனர். அங்கே, மதிய உணவு உண்ணும் தம்பதியரை கண்டனர்.
ஆம், அங்கே அமர்ந்திருந்தது சாட்சாத், மல்லிகேவும், அவளது கள்ள காதலன் கணேஷ் இருவரும் தான். அவர்கள் சிரித்துக்கொண்டே, இன்பமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
எங்கள் நண்பர் சுரேஷிற்கு கொலை குற்றவாளி பட்டம் வாங்கி குடுத்துட்டு.. இந்த ஊர்ல ஜாலியா இருக்கியா.. என கோபத்தின் உச்சிக்கே சென்றனர் நண்பர்கள். உடனே, வீடியோ எடுக்கத் தொடங்கினர்.
இதை அறிந்த மல்லிகேவும், கணேஷும் அங்கிருந்து ஓட முயன்றனர். பேருந்தில் ஏறி தப்பிக்க பார்த்தனர். ஆனால், நண்பர்கள் ஓடிச்சென்று பிடித்து, உள்ளூர் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.அடுத்த நாள், மைசூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், மல்லிகேயும் கணேஷும் நிறுத்தப்பட்டனர்.
"இவள் உயிருடன் இருக்கிறாள்," என்று சுரேஷ் உறுதிப்படுத்தினான். அந்த அழுகிய உடல். வேறொரு பெண்ணின் உடல். DNA சோதனையிலும் வேறு பெண்ணின் உடல் என உள்ளது. ஆனால், போலீஸ் காரர்கள் சிலரால் அது திருத்தப்பட்டது. ஒரே நேரத்தில் ரெண்டு கேஸ்சை க்ளோஸ் பண்ணிட்டோம் என பெரும் பீத்தினார்கள் அந்த கொடூர போலீஸ்கார்கள்.
போலீஸ் தவறுகள் – அடையாளம் உறுதிப்படுத்தாமல், சந்தேகத்தின் அடிப்படையில் கைது – அனைத்தும் வெளியானது. நீதிமன்றம், மைசூர் எஸ்பி என். விஷ்ணுவர்தனனுக்கும், பெட்டடாப்பூரா விசாரணை அதிகாரிக்கும் அறிவிப்பு அனுப்பியது.
ஏப்ரல் 17-க்குள், விரிவான அறிக்கை சமர்ப்பிக்க சொல்லியது.சுரேஷின் வழக்கறிஞர் பாண்டு பூஜாரி, "இப்போது சுரேஷ் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. IPC 211 பிரிவின் கீழ், விசாரணை அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை கோரி விண்ணப்பம் செய்வோம். சுரேஷுக்கு கௌரவமான விடுதலை வேண்டும்," என்றார்.
சுரேஷ், இப்போது தான் நிம்மதியாக மூச்சு விடுகிறேன் "மல்லிகே, கணேஷ், போலீஸ் – அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தைப் பாதுகாக்க வந்தவர்கள், தவறான வழக்கில் குற்றம்சாட்டினால், யார் நம்புவார்கள்?" என்று கோருகிறார் அவர்.
அவரது தந்தை வி. காந்தி, மகிழ்ச்சியுடன் கலந்த கோபத்துடன், "நாங்கள் போலீஸிடம் வேண்டியபோது, பணம் கேட்டார்கள். எங்களிடம் இல்லை என்றோம், எங்கள் மீது குற்றம் சுமத்தி விட்டார்கள். தினசரி வேலைக்காரர்கள், எப்படி கொடுப்போம்? காசு இல்லாதவங்களுக்கு.. போலீஸ் தேவையில்லையா?" என்று கேட்கிறார்.
சுரேஷின் கதை, ஒரு தவறான குற்றச்சாட்டின் வலியைச் சொல்லுகிறது. உண்மை, இறுதியில் வென்றாலும், இழந்த நாட்கள், அவமானம் – அவை திரும்பாது. ஆனால், இன்று, பாசவன ஹள்ளியில், சுரேஷ் தன் குழந்தைகளுடன் இப்போது சிரிக்கிறான்.
மல்லிகேவின் பெற்றோரும் சுரேஷிடம் மன்னிப்பு கேட்டு காலில் விழுந்து அழுதனர். குழந்தைகளும், "அப்பா குற்றவாளி இல்லை.." என்று கண்ணீர் விட்டனர். அவர்கள் இப்போது அறிவார்கள்.
சுரேஷின் வாழ்க்கை, இரண்டு குழந்தைகளுடன் மீண்டும் தொடங்குகிறது. இருள் குறைந்து, ஒளி அதிகரித்து.