கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டு மின்சார கட்டணத் செலுத்துவதற்காக வங்கிக்கு சென்று அங்குள்ள பண
வைப்பு இயந்திரத்தில் பணத்தை வைப்பிட தெரியாத அவர் மின் கட்டணத்தை வைப்புச் செய்வதற்கு அருகில் உள்ள இளைஞன் ஒவவனின் உதவியை நாடியுள்ளார்.
இதன் பொருட்டு குறித்த இளைஞனிடம் தனது வீட்டு மின்சார கணக்கு இலக்கத்தையும், ஆறாயிரம் ரூபா பணத்தையும் வழங்கியுள்ளார். அந்த இளைஞனும்
குறித்த பெண்ணுக்கு உதவி செய்வது போல் அவர் வழங்கிய கணக்கு இலக்கத்திற்கு பணத்தை வைப்புச் செய்வது போன்று பசாங்கு காட்டி தனது வங்கி
கணக்கு இலக்கத்திறகு பணத்தை வைப்புச் செய்துவிட்டு அருகில் இருந்த குப்பை கூடைக்குள் இருந்து பணம் வைப்புச் செய்த ஒரு சிட்டையை குறித்த
பெண்ணிடம் கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.
வீடு திரும்பிய பெண் மகனிடம் சிட்டையை கொடுத்த போதே அது தங்களுடைய மின்சாரக் கட்டணத்திற்கு செலுத்தப்பட்டது அல்ல என்பது தெரிய வந்தது. இதன் பின்னர் வங்கிக்கு சென்ற பெண் குறித்த இளைஞனின் வங்கி கணக்கு விபரங்களை கோரிய போது வங்கி நிர்வாகம் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டு முறைப்பாட்டு சிட்டையுடன் வந்தால் மாத்திரமே விபரங்களை வழங்க முடியும் என
தெரிவிக்க அப் பெண் பொலீஸ் நிலையம் சென்றிருக்கின்றார். ஆனால் கிளிநொச்சி
பொலீஸ் நிலையத்தில் ஆறாயிரம் ரூபாவுக்கு எல்லாம் முறைப்பாடு எடுக்க முடியாது என கூறியதனால் எதுவும் செய்ய முடியாது வீடு திரும்பிவிட்டார்.