போதை மாத்திரைகளுடன் பொலிஸ் நிலையத்துக்குள் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மாலை கைது செய்யப்பட்டதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளிடமிருந்து 5 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கடமை நேரத்தில் கடமையை செய்யாமல் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியே சென்று நீண்ட நேரத்தின் பின்னர் மீண்டும் பொலிஸ் நிலையத்துக்குள் சென்றுள்ளார்.
இதன்போது பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளிடமிருந்து போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்