புதன்கிழமை, 8 அக்டோபர் 2025
மேஷம்
aries-mesham
தேவைக்கு அதிகமாகவே தனவரவு உண்டாகும். சீராக, நவநாகரீகம், மிடுக்கான உடை உடுத்தி, மற்றவர்களை கவரும் வண்ணம் நடந்துகொள்வீர்கள். உங்கள் தேஜஸ் கூடும்.
ரிஷபம்
taurus-rishibum
நினைத்ததற்கு மாறாக வேறு இடத்திற்கு பணிமாற்றம் ஏற்படலாம். மங்கையரால் ஏற்படும் செலவுகளால், கடன் பெறும் சூழ்நிலை ஏற்படலாம். உண்ணவும் நேரமின்றி உழைக்க நேரிடும்.
மிதுனம்
gemini-mithunum
கௌரவமும், மதிப்பும் கூடும். ஆசைகள் எல்லாம் நிறைவேறும். அதிகாரிகள் ஆதரவால் பணி முன்னேற்றங்கள் ஏற்படும். நம்பிக்கைக்கு உரியவர்கள் நட்பு கிடைக்கும்.
கன்னி
virgo-kanni
வாகன சுகம் குறையும். முக்கிய விவகாரங்களை ஒத்திப் போடுவது நல்லது. உயர் அதிகாரிகளின் ஆணைகளை ஏற்று நடந்தால் பணியில் முன்னேற்றங்கள் இருக்கும்.
மகரம்
capricorn-magaram
வேலைகளை ஏனோ தானோ என முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பதறாத காரியம் சிதறாது. இயலாமை காரணமாக ஏற்படும் எரிச்சலை குறைத்தால், இரத்த அழுத்தம் அதிகரிக்காது.
கடகம்
cancer-kadagam
சீரான வருமானத்தால் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும்.
சிம்மம்
leo-simmam
தொழில் பயணங்களால் வெற்றி கிட்டும். ஆராய்ச்சி மேற்கொள்ளும் எண்ணம் எழும். வியாபாரிகளுக்கு, வாடிக்கையாளர்களின் ஆதரவால் இலாபம் அதிகரிக்கும்.
துலாம்
libra-thulam
இனிய பேச்சால் எல்லாவற்றிலும். வெற்றி அடைவது, அனைவரையும் கவர்வீர்கள். புதிய உத்தியோக வாய்ப்புகள், பதவி உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.
மீனம்
pisces-meenam
வீட்டிலும் வெளியிலும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கறையுடன் படித்தால், கல்வி தடைகளை தவிர்க்கலாம். பயணங்களில் கவனம் தேவை.
தனுசு
sagittarius-thanusu
குழந்தைகளுக்கான மருத்துவச் செலவுகள் கூடும். வண்டி வாகனங்களில் செல்லும் போது மிகவும் எச்சரிக்கையுடன் நிதானமாக செயல்படுங்கள். எல்லாவிதத்திலும் செலவுகள் கூடும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பயணத்தில் சுகானுபவங்கள் ஏற்படும். நண்பர்கள் கேட்டவுடன் மறுக்காது உதவி செய்வார். கல்லூரிக் கனவுகள் நனவாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
கும்பம்
aquarius-kumbam
தனவரவு கூடும். மனைவியின் ஒத்துழைப்புக் கிடைக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையால், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். எண்ணிய எண்ணியாங்கு நடக்கும்.
