இலங்கையில் இதுவரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர்களில் மக்கள் மனதில் இடம்பிடித்த ஜனாதிபதியாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உள்ளார்.
அவரது எளிமையும், நேர்மையும் இலங்கை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இம்மாத தொடக்கத்தில் ஜனாதிபதி அனுர குமார வடக்கிற்கு விஜயம் செய்ததுடன் , பலவேரு நலத்திட்டங்களையும் ஆரம்பித்து வைத்திருந்தார்.
வழமையாக நாட்டின் முன்னைய ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்தால் பெரும் அமர்களப்படுத்தி வருவார்கள்.
அவர்கள் அமர குசன் கதிரைகள் , பாதுகாப்பு என அல்லோலகல்லோலப்படும் .
மரம் நடுகை என்றால் கூட அவர்கள் நடக்கும் பாதைகளுக்கு கம்பளம் விரித்து அலங்கரிக்கப்படும்.
இந்நிலையில் யாழில் தங்கியிருக்கையில் , மிகவும் எளிமையாக அமர்ந்து ஜனாதிபதி அனுர உணவு உண்னும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

