கேரள மாநிலம் கொல்லம் அருகே 6 மாதமாக காதலன் வீட்டில் வசித்து வந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆயூர் அருகே உள்ள காராளிக்கோணம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். அவரது மகள் அஞ்சனா (21).
அதே பகுதியைச் சேர்ந்த முகமது நிஹாஸ் என்பவரை காதலித்து வந்தார். இவர் ஒரு தனியார் பஸ்சில் கண்டக்டராக உள்ளார்.இவர்களது காதலுக்கு அஞ்சனாவின் வீட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் ஆயூர் பொலிஸில் புகார் செய்தனர். இதையடுத்து பொலிஸார் 2 பேரையும் கொல்லம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது காதலனுடன் செல்ல விரும்புவதாக அஞ்சனா கூறினார்.இதையடுத்து அவரை நீதிமன்றம் காதலனுடன் அனுப்பி வைத்தது.
அதன்படி கடந்த 6 மாதங்களாக நிஹாசின் வீட்டில் வசித்து வந்தார்.இந்தநிலையில் நேற்று இரவு வீட்டின் படுக்கை அறையில் அஞ்சனா தூக்கு போட்ட நிலையில் காணப்பட்டார்.
உடனடியாக வீட்டினர் அவரை மீட்டு அருகிலுள்ள கடைக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அஞ்சனா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.