இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் ரக்ஷா பந்தன் அன்று தனது கையில் ராக்கி கட்டிய தங்கை முறை உறவு கொண்ட 14 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இளைஞன் மாமாவின் வீட்டிற்கு சென்றிருந்த போது இரவில் மது அருந்திய போதையில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான்.
பின்னர் அவளது உடலை அந்த அறையில் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை போல சித்தரித்துள்ளான்.
அடுத்த நாள் தனது மகள் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியைடந்த சிறுமியின் அப்பா பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
முதலில் இதை தற்கொலை என நினைத்த பொலிசார் சிறுமியின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது தான் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொள்ளப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து சிறுமியின் உறவினர்களிடம் விசாரித்த பொலிசார் முன்னுக்கு பின் முரணாக பேசிய இளைஞனை கைது செய்து விசாரித்தனர்.
பின்னர் அந்த இளைஞன் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.