தங்காலையிலுள்ள மடிலா கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆறு வயது சிறுமி அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் இன்று (13) இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமியின் குடும்பத்தினர் தங்காலைக்கு சுற்றுலா சென்றதையடுத்து, உள்ளூர் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்துள்ளனர். கொழும்பில் உள்ள ஒரு முன்னணி பெண்கள் பாடசாலையின் மாணவியே இவ்வாறு கடலுக்கு பலியாகியுள்ளார்.