எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக இரட்டை கெப் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தேசிய மக்கள் சக்தி தலைமையிலான தற்போதைய அரசாங்கம், சுங்க வரி இல்லாமல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அனுமதியை நிறுத்தியது.
கடந்த காலங்களில், உறுப்பினர்கள் அத்தகைய அனுமதிகளைப் பயன்படுத்தி விலையுயர்ந்த சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்தனர்
இல்லையெனில், மில்லியன் கணக்கான ரூபாய் கட்டணங்களுக்கு, இந்த அனுமதிகளை மூன்றாம் தரப்பினருக்கு மாற்றினர். இதனை கட்டுப்படுத்தும் வகையிலேயே இதுவரை, அரசாங்கத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் ஒதுக்கப்படவில்லை.
இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக இரட்டை கெப் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.