முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன நேற்றையதினம் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
2010ஆம் ஆண்டில் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இலங்கையின் கடற்பரப்பை பாதுக்காக்கும் பொறுப்பை கொண்ட கடற்படை அதிகாரிகள் ஏன் பொதுமக்களை கடத்த வேண்டும் என்று தற்போது சந்தேகம் வலுக்கின்றது.
இவ்வாறிருக்க, சிரேஷ்ட பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொடவின் படுகொலை இடம்பெற்று அவரை புதைத்த இடத்தை காட்டுவேன் என தற்போது நியூஸிலாந்தில் இருக்கும் இலங்கையின் முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர் கூறுகின்றார்.
எனினும், தன்னுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது அவருடைய ஒரு கோரிக்கையாக உள்ளது.
நிஷாந்த உலுகேதென்ன கடற்படை தளபதியாக இருந்த காலகட்டத்தில் தான் பிரகீத் எக்னெலிகொடவின் படுகொலையும் இடம்பெற்றது.
இதேவேளை, கடற்படை அதிகாரிகளால் தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் எண்ணிலடங்காதவை.
கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்படுதலில் ஏன் கடற்படையினர் தொடர்புபட்டனர்? கடற்படையின் பின்னணியில் இயங்கியது என்ன?