மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் வலையில் அரிய வகை சூரியன் மீனொன்று சிக்கியுள்ளது.
இந்த மீனானது சிறிய வாய், துடுப்பு போன்ற உடலமைப்பு வால்பகுதி இல்லாமல் காணப்படும்.
பாம்பன் துறைமுகத்திற்கு வந்த இந்த அரிய வகை சூரியன் மீனை மண்டபம் மத்திய கடல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து மீனின் நீளம் அகலம், எடை உள்ளிட்டவைகளை குறித்துக்கொண்டனர்.
கனடா, கொலம்பியா, தென்ஆப்பிரிக்கா, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளின் கடல் பகுதியில் அதிகமாக காணப்படும் இந்த வகை மீன் பாம்பன் கடல் பகுதியில் காணப்படுவது மிகவும் அரிது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த மீனை வாங்குவதற்கு வியாபாரிகள் முன் வராததால் ஆய்வு பயன்பாட்டுக்காக சூரியன் மீனை மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைத்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

