கண்டி, பேராதனை வீதியில் அமைந்துள்ள அழகுக்கலை நிலையம் ஒன்றில் நேற்றையதினம்(20) ஏழு பெண்கள் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மின் தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
மின்சார தேவை
அதன்போது, குறித்த அழகுக்கலை நிலையம் முழுமையாக மூடப்பட்டிருந்த நிலையில் மின்சார தேவைக்காக மின்பிறப்பாக்கி இயக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வளிசீராக்கி இயக்கப்பட்டதால் காற்றோட்டம் இல்லாதமையினால் மின்பிறப்பாக்கியிருந்த வெளியான நச்சுப் புகை காரணமாக குறித்த பெண்கள் சுயநினைவை இழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தநிலையில் மயக்கமுற்ற பெண்கள் சிகிச்சைக்காக கண்டி தேசிய மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.