மாத்தறை மஹாநாம பாலத்தில் இருந்து குதித்து உயிர் மாய்க்க முயன்ற நபரொருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 02:15 மணியளவில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
94 வயதான முதியவர் ஒருவரே இவ்வாறு பாலத்தில் இருந்து குதித்துள்ளார்.
உயிரை மாய்க்க முயன்ற நிலையில் உடனடியாக மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
குறித்த நபர் மூன்றாவது கெமுனு கண்காணிப்பு படையினரால் மீட்கப்பட்டு மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் குறித்து மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.