இலங்கை அஞ்சல் #திணைக்களம் கண்காணிப்பு முகாமைத்துவ உதவியாளர் – தொழில்நுட்பம் அல்லாத / தொழில்நுட்ப பதவித் தொகுதியின் III ஆந் தர அஞ்சல் சேவை அலுவலர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2025 பரீட்சை - 2025 ஒக்டோபர் மாதம் இடம்பெறும். வெற்றிடங்கள் - 600 தெரிவுமுறை - மாவட்ட அடிப்படை விண்ணப்ப காலம் - 2025 ஜூலை 28 - 2025 ஆகஸ்ட் 15 விண்ணப்ப முறை - நிகழ்நிலை வயதெல்லை - 18 - 30 தகைமைகள் - 1. கல்வித் தகைமைகள் சிங்களம்/தமிழ்/ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்தியுடன் மேலும் இரண்டு பாடங்களுக்கு திறமைச் சித்தியுமாக ஒரே அமர்வில் 6 பாடங்களில் க.பொ.த.(சா/த) சித்தி அடைந்திருத்தல். மற்றும் க.பொ.த (உ/த) பரீட்சையில் மூன்று பாடங்களில் (சாதாரண பொதுப் பரீட்சை தவிர்ந்த) ஒரே அமர்வில் சித்தி அடைந்திருத்தல். 2. தொழில்சார் தகைமைகள் கணினிப் பாவனை சம்பந்தமான மூன்றாம் நிலை மற்றும் தொழில் கல்வி ஆணைக்குழுவின் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் 360 மணித்தியாலங்களுக்கு குறையாத பாடநெறியைப் பூர்த்தி செய்துள்ளதாக சான்றிதழ் பெற்றிருத்தல். பரீட்சை முறை 01. மொழித் திறமை - 01½ மணித்தியாலம் 02. நுண்ணறிவுப் பரீட்சை - 01 மணித்தியாலம்