யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில், வடிகான் கட்டமைப்பை ஏற்ப டுத்துவதற்காக, தோண்டப்பட்ட அத்திவார குழியிலும், சில மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மழையுடனான வானிலை நிலவும்போது, மனித புதைகுழியின் அகழ்வு பணிகளுக்கு, எவ்வித இடையூறும் ஏற்படாதவகையில், நேற்று வடிகான் கட்டமைப்பை அமைப்பதற்கான அத்திவாரக்குழி தோண்டப்பட்டது.அதிலும், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், குறித்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டதாக, பாதிக்கப்பட்டோர் தரப்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.இந்தநிலையில், குறித்த பகுதியிலும் நீதவானின் மேற்பார்வையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர்கள் கூறுகின்றனர்.இதனிடையே, செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைக்குழியில் இருந்து, இதுவரை 47 என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.அவற்றில் 44 என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.சிறார்களின் என்புக்கூட்டுத் தொகுதிகள் அடங்களாக மீட்கப்பட்டுள்ள இந்த என்புக்கூட்டுத் தொகுதிகள், மனித பேரவலத்தின் அடையாளங்களாக மாறியுள்ளன.இந்த பின்புலத்தில், இன்றைய தினமும் செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.