எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இந்தியாவின் மேகாலயா மாநிலம் காணப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தேசிய அளவில் மேகாலயா மாநிலம் 6ஆவது இடத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, திருமணத்துக்கு முன்பு எச்.ஐ.வி பரிசோதனையை கட்டாயமாக்குவதற்கான சட்டத்தை இயற்ற தீர்மானித்துள்ளதாக அந்த மாநிலத்தின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
குறித்த சட்டத்தை கட்டாயமாக்குவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சட்டமூலம் தொடர்பில் விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.