சப்ரகமுவ மாகாணத்தில், குறைந்த வருமானம் கொண்டவர்களின் மருத்துவ உதவிக்காக, 7.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ மாகாணசபைக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சமூக சேவை நிதியத்தின் ஊடாக, பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதுவரையான காலப்பகுதியில் 105 குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மருத்துவ உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.