குருநாகலையில் பாடசாலை மாணவிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் நடத்துனர், தனது உயிரைப் பணயம் வைத்து விபத்தைத்
தடுத்து மாணவிகளின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. பேருந்து செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, நடத்துனர் உடனடியாக பேருந்தின் கட்டுப்பாட்டை ஏற்று, வாகனத்தை இடதுபுறமாக திருப்பி, மின்கம்பத்தில் மோதச் செய்தார்.“ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது நடத்துனர் துரிதமாகச் செயல்பட்டு, பேருந்தை இடதுபுறம் திருப்பினார். அவர் இவ்வாறு செய்யாவிட்டால், பேருந்து வலதுபுறமுள்ள கடை ஒன்றின் மீது மோ தி, பள்ளத்தாக்கில் விழுந்திருக்கும்,” என பாடசாலையின் அதிபர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.மாணவிகளின் உயிரைக் காப்பாற்றிய நடத்துனரின் வீரச் செயலைப் பாராட்டும் வகையில், அவருக்கு மரியாதை வழங்க வேண்டும் என மாணவிகளே முன்மொழிந்ததாகவும் அதிபர் மேலும் கூறினார்.