வைத்தியசாலை ஒன்றில் தாயை தாக்கிய வைத்தியசாலை வரவேற்பாளரை மகன் நையப்புடைத்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வைத்தியசாலைக்கு தனது தாயுடன் சென்ற மகன், அங்கு முரண்பட்ட நிலையில் தாயார் மகனை வெளியே அனுப்பிவிடுகின்றார்.
இந்நிலையில் வரவேற்பறையில் இருந்த பெண், திட்டிக்கொண்டே வெளியே வந்து அங்கு காத்திருத தாயின் கன்னத்தில் ஓங்கி அறைகின்றார்.
யுவதியின் செயலால் அங்கிருந்தவர்கள் அதிச்சியில் பார்த்துகொண்டிருக்க , தாயை, யுவதி தாக்கியதை கண்ட மகன் மீண்டும் உள்ளே வந்த, அந்த பெண்ணை நைய்ய புடைத்துள்ளார்.
அதன் பின்னர் அங்கிருந்தவர்கள் இளைஞனை வெளியே அனுப்பி விடுகின்றனர். குறித்த சம்பவம் எங்கு இடம்பெற்றது என்பது தெரியவராத நிலையில், வயதான பெண்ணை தாக்கிய யுவதியை சமூக வலைத்தளவாசிகள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.