ரஷ்யாவின் கிழக்கு கம்சட்கா பிராந்தியத்தின் கடற்கரையில் இன்று (20) காலை ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 7.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக யூரோ-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
20 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ஆரம்பத்தில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.