எசல பெரஹெராவை முன்னிட்டு ஜூலை 29 முதல் ஓகஸ்ட் 4 வரை இரண்டாம் தவணை விடுமுறைக்காக அந்தப் பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்படும் என்று கண்டி வலயக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.
இலங்கையின் மிக முக்கியமான கலாசார மற்றும் மத விழாக்களில் ஒன்றான எசல பெரஹெரா ஜூலை 30 முதல் ஓகஸ்ட் 9 வரை நடைபெறும்.
இந்த நிலையில், அங்குள்ள சிங்கள மற்றும் தமிழ்ப் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறைகள் ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 17 வரை வழங்கப்படவுள்ளன.
அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 24 வரை விடுமுறை அளிக்கப்படும்.
பாடசாலை அதிபர்களுக்கு வெளியிடப்பட்ட சிறப்பு சுற்றறிக்கையில், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள், பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தங்குமிடமாகப் பயன்படுத்தப்படும் என்று வலயக் கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.