இந்தியாவின் ராஜஸ்தானில் போதைப்பொருள் தயாரித்த குற்றச்சாட்டில் இரண்டு அறிவியல் ஆசிரியர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் சுமார் 15 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ மெஃபெட்ரோன் போதைப்பொருளை தயாரித்துள்ளனர்.
இந்த போதைப்பொருள் பயன்பாடு கடுமையான மன மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியர்கள் இருவரும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலேயே இந்த போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டரை மாதங்களாக விடுமுறையில் இருந்து அவர்கள் போதைப்பொருட்களை தயாரித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு பிரபல அமெரிக்க தொலைக்காட்சித் தொடரான பிரேக்கிங் பேட்(Breaking Bad) பாணியில் அமைந்திருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
குறித்த தொடரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இரசாயனவியல் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் கல்வி பயின்ற மாணவன் ஒருவருடன் இணைந்து போதைப்பொருள் தயாரிப்பது போன்று திரைக்கதை நகரும் என்பது குறிப்பிடத்தக்கது.