பஹ்ரைன்இந்தியா திரும்பிய இளைஞர் விமானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்: பஹ்ரைனில் இருந்து இந்திய திரும்பிய 27 வயது அப்ஸல் என்ற இந்திய இளைஞர் விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருந்த நிலையில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அப்பா, அம்மா மற்றும் 3 தங்கைகள் அடங்கிய குடும்பத்தின் முதுகெலும்பாக இருந்த இளைஞர் குடும்பத்தை காப்பாற்றும் கனவுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் பஹ்ரைன் வந்துள்ளார். பஹ்ரைன் சென்றது முதல் தொடர்ச்சியாக காய்ச்சல், சளி உள்ளிட்ட உடல்நலக்குறைவுகள் காரணமாக அவதிப்பட்ட நிலையில்,அங்கே சிகிச்சை பெற்றார், ஆனால் நாட்கள் செல்ல செல்ல உடல்நிலை மோசமானது, இதையடுத்து சிகிச்சைக்காக தாயகம் திரும்பய நேரத்தில் இப்படி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. பஹ்ரைன்-கோழிக்கோடு விமானத்தில் வைத்தே இந்த துயரமான நிகழ்வு நடந்துள்ளது. பெரிய கனவுகளுடன் சென்ற அவர் உயிரற்ற உடலாக வீட்டுக்கு வந்தது குடும்பத்தினர் மற்றும் ஊர்மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.