முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது பயணங்களை மட்டுப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகிந்த பாதுகாப்பிற்காக சுமார் 108 மெய்க்காப்பாளர்கள் இருந்தனர்.எனினும் அநுர அரசாங்கத்தின் கீழ் மெய்க்காப்பாளர்களின் எண்ணிக்கை 60 ஆகக் குறைக்கப்பட்டது.
தற்போது, அந்த எண்ணிக்கையில் மேலும் 7 பேர் குறைக்கப்பட்டுள்ளனர். அவரது சாரதிகளாக 9 பேர் பணியாற்றிய நிலையில் 7 பேர் குறைக்கப்பட்டு 2 பேர் மட்டுமே பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான நிலையில் இனிமேல் நீண்ட பயணங்கள் மேற்கொள்வது கடியமாகிவிடும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
2 பகுதிகளாக பிரித்து வேலை வழங்கினாலும் ஒரு நேரத்தில் ஒரு சாரதியை மட்டுமே பயன்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தனது பயணங்களை மட்டுப்படுத்திய மகிந்த ராஜபக்ச வீட்டில் ஓய்வாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அவர் டயரி மற்றும் கடந்த கால அரசியல் வாழ்க்கை செயற்பாடுகளை எழுதி வருகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது