இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் திருவள்ளூர் அருகே, டீசல் ஏற்றிச் சென்ற ரயிலொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) திடீரென தீ பரவல் ஏற்பட்டது.
தீவிபத்து, திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நிகழ்ந்ததாகத் தெரியவருகிறது. ரயில் தடம் புரண்டதன் காரணமாக டீசல் கசியல் ஏற்பட்டதாகவும், அதனாலேயே தீ பரவியது என ஆரம்பிகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குப் பிறகு, தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மகிழ்ச்சிக்குரிய விஷயமாக, இந்த தீவிபத்தில் யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படவில்லை.