இரணைமடுக் குளத்தில் மீன் பிடிப்பதற்காக இன்று (17) பிற்பகல் 2.00 மணியளவில் வலையை எறிந்து கொண்டிருந்தவேளை ஒருவர் தவறி நீரில் வீழ்ந்து மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் சாந்தபுரத்தைச் சேர்ந்த பிச்சை துரைராசா எனும் 64 வயதுடைய ஆறு பிள்ளைகளின் தந்தையே எனத் தெரியவந்துள்ளது.