இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 சிறுவர்கள் குளத்தில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த துயரச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
10 வயதிற்குட்பட்ட 3 சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.
குளத்தின் ஆழமான பகுதிக்குக் குறித்த சிறுவர்கள் மூவரும் சென்றுள்ளனர்.
மூவருக்கும் நீச்சல் தெரியாததன் காரணத்தால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் 3 லட்சம் ரூபாய் பணமும் வழங்கியுள்ளார்.