வெளியான 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (GCE O/L) பெறுபேறுகளின் படி கல்முனை கல்வி வலய கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 54 வருட கால கல்வி பயணத்தில் முதற்தடவையாக அதிகமான “9A” விசேட சித்திகளை பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் 34 மாணவிகள் சகல பாடங்களிலும் A சித்தியை பெற்றுள்ளதுடன் 15 மாணவிகள் 8A,B சித்திகளையும், 02 மாணவிகள் 8A,C சித்திகளையும், 08 மாணவிகள் 7A,2B சித்திகளையும், 04 மாணவிகள் 7A,1B,1C சித்திகளையும், ஒரு மாணவி 7A,2C சித்திகளையும் பெற்று விசேட சித்திகளைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்
இதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் (GCE O/L) பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
குறித்த விடயம் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (14) முதல் 28 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி (A.K.S. Indika Kumari) தெரிவித்துள்ளார்.
இது சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், 13,392 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் 9 A சித்திகளை பெற்றுள்ளதாகவும் இது மொத்தப் பரீட்சார்த்திகளில் 4.15% என பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்