வீதியில் கழுத்தை வெட்டி களவெடுத்த சம்பவம் ! 26 வயதுயுவதி உயிரிழப்பு நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது:

 


வீதியில் இனந்தெரியாத நபரொருவர் யுவதி ஒருவரின் கழுத்தை வெட்டி அவரது கழுத்தில் இருந்த தங்க மாலையை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (02) மாலை இரத்தினபுரியில் குருவிட்ட தெவிபஹல - தொடன்எல்ல வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


காயமடைந்த யுவதி இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் குருவிட்ட - தெவிபஹல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதி ஆவார். யுவதியின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேக நபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.