மேக்கப் இல்லாமல் தனது மனைவியை கண்டதும் உடனடியாக விவாகரத்து செய்துள்ள சம்பவம் துபாயில் நிகழ்ந்துள்ளது.
திருமணமாகி சில நாட்களுக்குப் பிறகு, 34 வயதுடைய ஒரு அரேபியர் தனது 28 வயதுடைய மனைவியை, மேக்கப் இல்லாமல் பார்த்ததும், அவள் திருமணத்திற்கு முந்தையதைப் போல அழகாக இல்லை என்றும் அழகு சாதன பொருட்களை பயன்படுததி தன்னை ஏமாற்றியுள்ளார் என்றும் கூறி உடனடியாக விவாகரத்து செய்துள்ளார்.
அவர்கள் ஷார்ஜாவின் அல் மம்சார் கடற்கரையில் நீச்சலுக்குச் சென்றபோது, மனைவியின் மேக்கப் நீரால் கழுவப்பட்டு, அவரது இயல்பான முகம் தெரிய வந்துள்ளது. திருமணத்திற்கு முன் மனைவி செயற்கை இமைகள் மற்றும் அழகு சிகிச்சைகள் மூலம் தனது தோற்றத்தை மாற்றியிருந்தார் என அவருக்கு தெரியவந்துள்ளது.
மணமகள் உண்மையை கூற விரும்பினாலும், நேரம் தவறியதால், கணவர் எந்தவொரு சமாதான முயற்சியையும் நிராகரித்து, உடனடியாக விவாகரத்து செய்தார் என்று மனோதத்துவ நிபுணர் டாக்டர் அப்துல் அசீஸ் அசாஃப் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.