அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் நியூ ஜெர்சியில் உள்ள மோரிஸ்டவுன் நகராட்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட ஏர் ஃபோர்ஸ் படிகளில் ஏறும்போது வழுக்கி விழும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(08) பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் ட்ரம்பைப் பின்தொடர்ந்து சென்ற அதே படிக்கட்டில் தடுமாறி விழுந்துள்ளார்.
முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன், ஏர் ஃபோர்ஸ் ஒன்னின் படிக்கட்டுகளில் தடுமாறி விழுந்தது குறித்து ட்ரம்ப் முன்பு கூறிய கருத்தை சமூக ஊடக பயனர்கள் நினைவுபடுத்தியுள்ளனர்.
அதாவது "ஜோ பைடனால் ஏர் ஃபோர்ஸின் படிக்கட்டுகளில் கூட ஏறிச் செல்ல முடியாது... எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான எந்தத் அருகதையும் இல்லாத ஒருவர் எங்களிடம் இருக்கிறார்" என்று ட்ரம்ப் முன்னதாக கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீடியோ 👉 pic.twitter.com/muq4ckb1wg