முத்தமிழ்வித்தகர் க.சரவணபவன் அவர்களுக்கான நினைவேந்தல்.

முல்லைத்தீவின் மொழிப்பற்றாளனும், கலை இலக்கியத்துறை ஆர்வலருமாகிய காலம்சென்ற தமிழாசான் 'முத்தமிழ் வித்தகர்' க.சரவணபவான் அவர்களுக்கான 14ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றையதினம் (18.06.2025) அனுஷ்டிக்கப்பட்டது.
அமரர் க.சரவணபவான் அவர்கள், முல்லைக்கல்வி வலய ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்படி நிகழ்வானது, அமரர் க.சரவணபவான் ஞாபகார்த்த நற்பணி மன்றத்தினரால் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பொன்விழா மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
காலைநேர நிகழ்வுகளாக மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற மாணவர் விபரம் வருமாறு.. பிரிவு 1 • நிலை 1-சிவயோகன் அக்சா -மு /சிறி சுப்பிரமணிய வித்தியாசாலை. • நிலை 2-கேதீஸ்வரராசா யோபிகன் -மு /புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி. • நிலை 3-ஜெகதீபன் மதுர்சன் -மு /முத்துஐயன்கட்டு இடதுகரை அ.த.க பாடசாலை. பிரிவு 2 • நிலை 1-வாசுதேவன் கனுஸ்டிகா -மு /புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி. • நிலை 2-அருந்தவநேசன் பவித்திரா-மு /விசுவமடு மகா வித்தியாலயம். • நிலை 3-கமலேஸ்வரன் மதுசா -மு /விசுவமடு மகா வித்தியாலயம்.
பிரிவு 3 • நிலை 1-பார்த்தீபன் அறிவன் -மு /புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி. • நிலை 2-டொமினிக் சுகந்தன் பிரின்சியா -மு /இரணைப்பாலை றோ.க.ம.வி. • நிலை 3-சத்தியநிதி துளசியா -மு /வித்தியானந்தக் கல்லூரி. மேலும், மாலைநேர விசேட நிகழ்வுகளாக மு/வித்தியானந்தக்கல்லூரி மாணவர்களின் கோவலன் கூத்து மற்றும் மு/ வற்றாப்பளை மகாவித்தியாலய மாணவர்களின் காத்தவராயன் கூத்தும் நடைபெற இருப்பதோடு பரிசில் வழங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.